Posts

Showing posts from December, 2017

ஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்

தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான். வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின்பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களது படைக்கலன்கள் எல்லாம் ஆயுத பூசைக்காகக் கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன. மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன மந்திரிகளையும், பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், “மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சா°திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்” என்று சொன்னார்கள். மன்னனும்...

“சங்கராந்தி!”

பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும் , உழைப்பின் உயர்வை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து , அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புது மரியாதையை ஏற்படுத்தினார்கள் . ஆனால் அதையும் விட்டுவைத்தார்களா இந்தப் பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம் ? அதனிலும் மதச் சேற்றைப் போட்டுக் குழப்பி , ‘ சங்கராந்தி ’ என்றும் பெயரிட்டு , தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர் . அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள் : “ சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம் . இது தேவர்களுக்கு விடியற் காலம் . மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷிணாயனம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும் , பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால் , அத்துன்பம் ஈ ° வரானுக்கிரகத்தால் நீங்கினதால் , தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர் . அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ்செய்திருந்தபடியால் , அப்பசுக்களைக் கொண்டு , அப்புலியுருக் கொண்ட சக்தியை ஓட்டின நாள் . இதனை மாட்டுப் ...

அய்யப்பன் கதை

பத்மாசூரன் என்கிற அசுரன் , சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான் . சிவன் அவன் முன் தோன்றி , ‘ உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் ’ என்றான் . அதற்கு பத்மாசூரன் , ‘ நான் யார் தலையில் வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும் ’ என்றானாம் . சிவனும் , ‘ அவ்வளவுதானே ! அளித்தேன் போ !’ என்று கூறலானான் . பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று . சிவன் அளித்த வரமானது உண்மைதானா ? பலிக்குமா ? என்று சோதனை செய்ய எண்ணினான் . உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான் . சிவன் பயந்து போய் பல இடங்களுக்கும் ஓடினான் . பத்மாசூரன் விட்டபாடில்லை . பிறகு விஷ்ணுவிடம் அலைந்து சென்று , தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும் , பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி , அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான் . அதற்கு விஷ்ணுவானவன் , ‘ அதுதானா பிரமாதம் , இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன் ’ என்று கூறி , அழகிய மோகினிப் பெண் உருவ...

கந்த சஷ்டி

இந்த   சுப்ரமணியன்   பிறப்பு   அல்லது   கந்தசஷ்டி   என்பது   புராண   ஆபாசங்களில்   மோசமான   ஒன்றாகும் .  ஒருசமயம்   தேவர்கள்   எல்லாம்   போய்   சிவனிடம்   கேட்டார்களாம் : “ உலகில்   ராட்சதர்   கொடுமை   அதிகமாய்விட்டது .  அதை   எங்களால்   தாங்க   முடியவில்லை .  ஆகவே   அதைத்   தாங்கக்   கூடிய   அளவுக்கு   அவர்களை   அழிக்கக்   கூடிய   வல்லமை   பொருந்திய   ஒரு   பிள்ளையைப்   பெற்றுத்   தர   வேண்டும் ”  என்று   வேண்டினார்கள் .  அதற்குச்   சிவனும்   இணங்கி   பார்வதியைத்   திருமணம்   செய்து   கொண்டு   பிள்ளை   பெறும்   முயற்சியில்   அவளோடு   கலவி   செய்ய   இறங்கினானாம் . தொடர்ந்து  1,000  வருடங்கள்   கலவி   செய்து   கொண்டே   சிவனும்   பார்வதியும்   இருந்தார்களாம் .  ஆனால் ,...

மகாமகம்

மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு ‘ திருவிழா ’ கொண்டாடப்படுகிறது . அதுபற்றி எல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால் , பாவ புண்ணியத்தின் பேரால் , கடவுள் பேரால் , தீர்த்தம் , ஸ்தலம் , மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு , கடையர்களாய் , மடையர்களாய் ஆக்கப்படுகின்றார்கள் ? என்பதையும் சிந்தித்துப் பாருங்கள் . குளம் என்பது ஒரு சாதாரணத் தெப்பக்குளம் . தீர்த்தம் என்றாலும் , நதி என்றாலும் , குளம் என்றாலும் மழை பெய்வதனால் ஏற்படும் வெள்ளங் களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும் . ஊரில் உள்ள அசுத்தங்களையும் , கசுமாலங்களையும் அடித்து வந்து தேக்கி இருப்பதுதான் . மற்றக் குட்டித் தீர்த்தம் என்பதும் , கிணற்றுத் தண்ணீர் ஊற்றம் போன்ற ஊற்றாகும் . மேலும் , அந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் ( மாமாங்கக் குளத்தில் ) வடக்கில் ஏழு தீர்த்தங்களும் , கிழக்கில் நான்கு தீர்த்தங்களும் , நடுமத்தியில் அறுபத்தாறு கோடி தீர்...