Posts

Showing posts from September, 2017

சிலை வணக்கத்தால் சீரழியும் நாடு: இந்து மதத்தைத் தழுவிய கிரேக்க மாதின் எடுத்துக்காட்டு

இந்து மதத்தைத் தழுவிச் சாவித்திரி தேவி என்று மாற்றுப் பெயர் வைத்துக்கொண்ட கிரேக்க மாது , இந்துக்களுக்கு எச்சரிக்கை என்று தலைப்பிட்டு எழுதியுள்ள புத்தகத்தில் அபாய அறிகுறி என்ற அத்தியாயத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களாவன : ஆரியச் சிலை வணக்கத்துறையின் இறுதிக்கோட்டை - இந்த இந்தியா . ஆனால் , இந்த இந்தியாவில் இந்த இந்துத்வம் இனியும் எத்தனைக் காலம் உயிர்பற்றி நிற்கப் போகிறதோ ! கோயில்கள் நிறைந்த தென்னாட்டிலேயே இந்தக் கேள்வி வியப்பளிக்கலாம் . கோயில்கள் இருக்கும்வரை இந்துமதம் இருக்குமென்பது அவர்களுடைய எண்ணம் . ஆனால் , ஆரிய கலாச்சாரத்தின் தாயகமான வங்காளத்திலும் இந்து மதச் செல்வாக்கு பெரும் அளவுக்கு கரைந்துவிட்டது . மேற்கு பஞ்சாபில் ஓரளவுக்கு சீக்கியர்கள் இருந்தாலும் முஸ்லிம் மதத்தினர்கள் அதிகம் . வங்காளத்திலோ ஒரு இந்துவைக்கூட கண்ணில் காணாது பலகாத தூரம் பிரயாணம் செய்யலாம் . ( ஒரு சில பண லேவாதேவிக்காரர்களும் வியாபாரிகளும் தவிர்த்து மற்றெல்லோரும் முஸ்லிம்களே . கிழக்கு வங்கத்தில் மிகவும் அதிகம் ) பார்...

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்?

திருச்சியில் பெரியார் பேருரை புராணங்களை ஒழிக்கும் வகையாகப் புராணங்களையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிப்பதற்கு 15-20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் கூறினோம் என்பதாகவும் , இன்று ஒருபடி முன்னேறி விக்கிரகங்களை உடைக்கத் தீர்மானித்தோம் என்பதாகவும் , தந்தை பெரியார் அவர்கள் திருச்சி தேவர் ஹாலில் 29.3.1953 ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறியதோடு , ஏன் திராவிடர் கழகம் இம்முடிவுக்கு வந்ததென்பதையும் தெளிவுபடுத்தியதன் சுருக்கம் : பேரன்புமிக்க தலைவரவர்களே ! தாய்மார்களே ! தோழர்களே ! இக்கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் . இதற்கு முன் பேசிய சைதாப்பேட்டை தோழர் கு . மாணிக்கம் , சாதாரணமாக ஓரளவுக்கு எளிய தன்மையில் புராணங்களைப் பற்றியும் அவைகளில் பொதிந்துள்ள ஆபாசங்களைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொன்னார் . இன்றைய இந்தக் கூட்டத்துக்குப் பெண்கள் வரக் கூடாது என்று விளம்பர அறிக்கையில் போட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன் . ஏன் எனில் , நமது கடவுள்கள் விஷயமாக அவ்வளவு ஆபாசங்களைப் ...