மதமும் விஞ்ஞானமும் - அத்தியாயம் 5
அத்தியாயம்
5
ஆத்மா
எப்படி மனிதன் சொப்பனா அவஸ்தையிலிருந்து தனக்குள் சூட்சுமமான ஒரு சிறு சரீரம் அல்லது மனிதன் (ஆயமேனே)
உலாவிக் கொண்டு வருவதாக யூகித்தானென்று முதல் அத்தியாயத்தில் கூறினோம். இதைத்தான் இக்காலத்து மதங்களெல்லாம்,
சத்காயமென்றும்,
ஆத்மாவென்றும் கூறுகின்றன. பஞ்ச பூத பஞ்சீகரணத்தாலுண்டாகிய ஸ்தூல தேகத்திற்கு வேறாகிய இந்த ஆத்மா, ஸ்தூல தேகம் உண்டாவதற்கு முன்னும், அழிந்த பின்னும், முற்காலத்திலும்,
பாதிக்கப்படாமலிருப்பதாக மதாச்சாரியார்கள் சொல்லுகிறார்கள்.
சரீரத்தை ரதமென்றும், ஆத்மாவை ரதிகளென்றும் சொல்லுவார்கள். எதனைக் கண்ணால் காண்பதில்லையோ, எதனால் கண்களைக் காண்கின்றானோ அதனையே நீ ஆத்மாவென்று அறி ஆத்மா, நான்,
சிவன் என்பனவெல்லாம் ஒரே பொருளைக் குறிக்கின்றன.
இதனைப் பின்வரும் செய்யுள் நன்கு விளக்கும்.
சித்தமனம் புத்தியகங் காரமிவை யல்லேன்
செவியொடு நாக் கண்மூக்குத் தேகமுநா னல்லேன்
அத்தரைவான் புனல்வளியோ டனலிவையா னல்லேன்
அறிவுவகை யுருனின் யான் சிவம் யான் சிவமே
ஆத்மா இல்லாவிட்டால், மறு ஜன்மமில்லையே!
மறு ஜன்மமில்லா விட்டால், ஜீவனுக்கு ஒரு பிரயோஜனமுமில்லையே!
ஆத்மா இல்லாவிட்டால், நாம் செய்த கர்மத்தை யார் அனுபவிப்பது? மனிதர்க்குள்ள தாரதம்மியத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? என்று பல்வேறு கேள்விகளை ஜனங்கள் கேட்கிறார்கள்.
மேற்சொன்ன எண்ணங்கள் எவ்வளவு உண்மையாகக் காணப்பட்டாலும்,
சற்று ஆழ்ந்து யோசனை செய்தால், அவ்வெண்ணங்கள் தவறு என்று புலப்படும்.
ஆத்மா அழியாதென்றால் அதாவது முக்காலத்திலும் பாதிக்கப்படாமலிருக்கிறதென்றால்,
நாம் செய்யும் ஜபதபங்களும் நீதி மார்க்கமும் மோட்ச சாதனமும் அநாவசியமாகும். இவைகள் தேகத்தைச் சுத்தி செய்கிறதென்றால்,
தேகமும் அழிந்துவிடுமே! ஆகையால், என்ன பிரயோஜனம்? எங்குப் பார்த்தாலும் சுகமும் துக்கமும் காணப்படுவதால், சாசுவதமான வஸ்துவைப்பற்றி ஒருவன் எப்படி பேச முடியும்? ஆனால்,
சிலர் சொல்வது போல, ஆத்மா அழியுமென்றால், நாம் செய்யும் காரியங்களில் பலன் அனைத்தும் அழிந்துவிடும்.
அப்போது மோட்சமென்பதற்கு அர்த்தமில்லை.
ஒவ்வொரு பொருளுக்கும் நாம ரூபமுண்டு. ஸ்தூலமாக உள்ளவைகளுக்கு ரூபமெனப்படும்; சூட்சுமமாயுள்ளதற்கு நாமமெனப்படும். வீடுயென்றால் சுவர்க்கமும்,
தூண்களும்,
வட்டைகளும்,
ஓடுகளும் மற்றவைகளும் சேர்ந்த ஒரு கூட்டு. இவைகளை வேறு வேறாகப் பிரித்துத் தள்ளினால்,
அதிக சாஸ்வதமான வஸ்து வீட்டு ஆத்மா இருக்கிறதா? இல்லையென்றே கூறவேண்டும்.
அதே மாதிரியாக ஜீவன் அல்லது நான் என்பது பஞ்ச ஸ்கந்தங்களினால் ஆக்கப்பட்ட ஒரு கூட்டு
(ய ரவைல). ஆகையால், பஞ்சஸ்கந்தங்களின் கூட்டத்திற்கே மனிதன் (உயிர்) என்று பெயர். அறிவு
(ஊடிளேஉடிரளநேளள)
சில காரணத்தினால் உண்டாகிறது;
அக்காரணங்கள் மறைந்தவுடனே அறிவும் மறையும். அறிவானது உயிருள்ள ஜீவராசியோடு சம்பந்தப்பட்டே தோன்றும். இறந்த ஜீவர்களிடத்தில் அறிவு இல்லை. அறிவு ஜீவர்களிடத்தில் காணப்படினும்,
அது கணத்திற்கு கணம் மாறிக் கொண்டேயிருக்கும்;
சில வேளைகளில் அறிவு அடியோடு இல்லாதிருக்கலாம்.
(மறைந்திருக்கும்)
குளோரோபாரம்
(ஊடநசடிகடிசஅ),
அபினி முதலிய மருந்துகள் மனிதன் தேகத்தில் புகுந்தவுடனே, அறிவு மறைந்து நிற்கும். ஆனால், இரத்த ஓட்டம் (ஊசைஉரடயவடி)
சுவாசித்தல்
(சுநளயீசையவடி),
ஜீரணித்தல்
(னுபைநளவடி)
முதலிய காரியங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஆகையால், அறிவு ஜீவனுக்கே தவிர, ஜீவன் அறிவுக்கன்று. ஜீவன் இறந்தபோது அறிவும் அழியும். ஆகையால்,
அறிவே சிவன் என்பதற்கு ஆதாரமில்லை.
நான் என்பதும் எனதென்பதும் மனிதர் கூட்டத்தில் உண்டான பாஷையாகும்.
ஒருவன் காட்டில் தனிமையாக வாசிப்பானானால், அவன் அனுபவம் ஒரே மாதிரியாக இருக்கும். நான் என்னும் நீயென்றும் சொல்ல முடியாது. சுழுப்தியிலும், மருந்துப் போதையினாலும்,
நான் அல்லாதது மறைந்தபோது,
நான் என்பதும் மறைந்து போகும். சுழுப்தி அனுபவத்தை விரும்பும் அத்வைத வேதாந்திகளே, ஆத்மா தன்னைத்தான் அறிகிறதென்கிறார்கள்.
நான் என்னும் சொல், பல பேருக்குப் பல சமயங்களில் வெவ்வேறு அர்த்தத்தைத் தரும். குழந்தை,
யௌவன புருஷன், கிழவன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நான் என்று சொன்ன போதிலும், ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடுமாகையால்,
நான் என்னும் சொல்லின் அர்த்தமும் வேறுபடும்.
நான் குழந்தைப் பருவத்தும்,
யௌவனப் பருவத்தும், வயோதிகப் பருவத்தும்,
ஒருவனே என்று நினைப்பது ஞாபக சக்தியால்
(ஆநஅடிசல)
அல்லது தொடர்பினால் உண்டாகிறது.
அறிவு
(ஊடிளேஉடிரளநேளள)
அடிக்கடி மாறிக் கொண்டிருந்த போதிலும், தேக சம்பந்தமாக உண்டான அனுபவங்கள் அல்லது உணர்ச்சிகள்
(ளுநளேயவடி டிக டிரச டிற டினல) மற்றைய உணர்ச்சிகளைவிட ஸ்திரமுள்ளதாகத் தோன்றுகின்றன. கண், செவி, மூக்கு முதலியவற்றால் உண்டாகும் அனுபவங்களும் (ளுநளேயவடிளே) அதனால் உண்டாகும் எண்ணங்களினாலும் ஆக்கப்பட்ட அய்க்கியமாம்.
இந்த அய்க்கியத்தின் சம்பந்தமாக என்னுடைய தேகம் என்னுடைய ஆத்மா என்று சொல்லுகிறோம்.
மரணித்தல் ஜீவர்களின் இயற்கை, கூடியிருப்பவைகளெல்லாம் பிரியும். நட்சத்திரங்கள் எத்தனையோ அழிந்து போயின. சந்திரனும் இறந்து நம்மெதிரே நிற்கின்றன. அநேக சூரியர்கள் மறைந்துவிட்டன. இப்போது நம் எதிரில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனும் ஒருநாள் மறைந்து போகும். இவ்வாறே மனிதனுடைய கதியுமாகும். மனிதன் இறந்த பிறகு அவனிடத்து அழியாத ஒரு வஸ்து ஆத்மா இருக்கிறதென்பதற்கு நியாயமில்லை.
பாரத்தைத் தூக்கிக் கொண்டு போகிறவன் கீழே விழுந்தவுடனே பாரமும் கீழே விழும். இந்தக் கருத்தையே யக்ஞவல்கிய ரிஷியும் தன் பத்தினி மைத்ரேய்க்குச்
(ஆயவைசநல)
சொல்லியிருக்கிறார்.
ஆனால்,
செத்தவுடன் எல்லாம் முடிந்து போகவில்லை. நாம் பிறப்பதற்கு முன்னிருந்தோம். இறந்த பிறகும் இருக்கிறோம். சுக்கிலமும், சுரோணிதமும் கலந்தவுடன் மனிதன் உண்டாகிறான். விந்தும், நாதமும் (சுக்கிலமும் சுரோணிதமும்) மனித சுக்கிலத்தின் ஒரு சிறு துளியாம். இச் சிறுதுளி வளர்ந்து பெருகி பல சுக்கிலத்திற்கு இடமாகிறது. நாம் தாயின் கர்ப்பத்தில் 10 மாதங்கள் தங்கியிருந்தாலும் உண்மையாக தாய் பிறந்த நாளிலிருந்து கருப்பாசயத்தில் (டீஎடிசல) வளர்ந்து வருகிறோம். சில ஜீவராசிகள்
2 அல்லது
3 அல்லது
10 துண்டுகளாக வெட்டினாலும் ஒவ்வொரு துண்டும் மறுபடியும் வளர்ந்து முன்னிருந்த அளவுக்கு வரும். இவைகளுக்கு இறத்தல் என்பதே கிடையாது. ஆனால், அநேக ஜந்துக்களில் இன விருத்திக்காக ஒரு கூறு பிரத்தியேகமாய்க் காணப்படுகின்றது.
இதற்குத்தான் சுக்கில சுரோணிதமென்று பெயர். மனிதனும் சுக்கில, சுரோணிதங்களிலிருந்து வளர்வதால், இவனுக்கும் அழிவில்லை என்றே சொல்லலாம்.
பிரபஞ்சம் இருக்கிற பரியந்தம் உயிர் இருக்கும்.
ஆனால்,
எப்போதும் உயிர்கள் இறந்துகொண்டே இருப்பார்கள்.
மனிதன் இறந்த பிறகு என்ன ஆகிறான்? ஆடு மாடுகள் இறந்து பிறகு என்ன கதியடைகிறதோ, அந்தக் கதியே மனிதனும் அடைகிறான்.
மனிதன் இறந்த பிறகு, மீண்டும் வேறு நிலைமையில் வசிக்கிறானென்பது விஞ்ஞான சாஸ்திர சம்மதமாகாது.
படிப்பு வேறு, அறிவு வேறு
சாதாரணமாக கல்வி என்பதைப்பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புத்தகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுப் பரீட்சைகளில் (பாஸ்) தேறிவிடு வதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ., படித்துப் பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில் அதாவது, குருட்டு உருப்போட்டு ஒப்பிவிக்கக்கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது, அலமாரியில் உள்ள புத்தகங்களைப்போல் இவர்களும் தங்கள் மனத்தில் பல விஷயங்களை பதியவைத்திருக்கும் ஒரு நகரும் அலமாரி என்றுதான் சொல்ல வேண்டும்.
படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.
(27-7-1930 குடிஅரசு பக்கம் 8, 9)
Comments
Post a Comment