மதமும் விஞ்ஞானமும் - அத்தியாயம் 4
அத்தியாயம்
4
மனிதன்
சீதமும் உஷ்ணமும் உயிருக்கு இன்றியமையாதன. ஆகையால், உயிர் தண்ணீரிலிருந்தே உற்பத்தியாகியிருக்கிறது.
அதிலும் தாவர வர்க்கங்கள் முதலில் உண்டாயினவென்று முன் அத்தியாயத்தில் சொன்னோம் ஏனென்றால்,
அனிந்திரியப் பூதங்களாகிய கரியமில வாயுவையும் தண்ணீரையும் உணவாக மாற்றிக்கொள்ளும் சக்தி, செடிகளுக்கே உண்டாயிருக்கின்றது.
இக்காரணத்தினாலேயே செடிகள் பிராணிகளுக்கு முன்னர் ஏற்பட்டவையாகும்.
இப்பவுதிகச் செய்கையும் குளோரோப்பின்
(பசுமை)
நிறத்தால் ஏற்படும். சில சிறிய பிராணிகளுக்கும் குளோரோபில் இருப்பதால், சிலர் இதைப் பிராணி என்றும் சிலர் இதைத் தாவரமென்றும் கூறுகிறார்கள்.
இது எப்படி இருந்தபோதிலும் தாவரமும், பிராணியும் ஒரே வேரிலிருந்து உற்பத்தியாகித் தாவர வகை ஒரு கிளையாகவும்,
பிராணி வகை மற்றொரு கிளையாகவும் விருத்தியாயின.
ஆனாலும்,
இவ்விருவகைத் தோற்றங்களுக்கும் ரூபத்தில் அதிக வேறுபாடு காணப்பட்டாலும் உண்மையில் அதிக வித்தியாசமில்லை என்று உலகப் பிரசித்திபெற்ற நமது இந்திய நாட்டவராகிய டாக்டர் ஜே.சி.
போனஸ் தம்முடைய அற்புதமான ஆராய்ச்சியினால் ருசுப்பித்திருக்கிறார்.
பிராணிகளை,
ஒற்றைக் கிருமிப் பிராணிகளென்றும்,
பல கிருமிப் பிராணிகளென்றும்
(ருஉநடடரடடிச யனே அரடவஉநடடரடடிச)
இருவகைகளாகப் பிரிக்கலாம். இரண்டாவதாகச் சொல்லப்பட்ட பல கிருமிப் பிராணிகள், முதுகெலும்பு உள்ளவையென்றும் முதுகெலும்பு இல்லாதவை என்றும் இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒற்றைக் கிருமிப் பிராணி, மற்ற பிராணிகளையோ அனிந்திரிய வஸ்துகளையோ தின்று, ஒன்று பலவாகி ஒன்றோடொன்று சேர்ந்து, பல கிருமிப் பிராணியாய் மாறினது, காலஞ் செல்லச் செல்ல அதன் தேகத்தின் மேல்பாகம் உள்குவிந்து வாய்மாத்திரமுள்ள,
பஞ்சுப்பிரமணியாகவும் ரஅ(ளுயீடிபேந), சொறியாகவும் (துநடடலகளை) பிறகு வாயுடன் குடலும் மூளையும் பிறகு ஜனனேந்திரியங்களும் உள்ள புழுப் பிராணியாகவும்,
சங்காகவும்,
பூச்சிப் பிராணிகளாகவும், நட்சத்திரப் பிராணிகளாகவும் மாறுபட்டன. ஏதோ ஒரு புழுப்பிராணியிலிருந்து நீந்துவனவாகிய மீன் வகைகளும் அதிலிருந்து தவளை வகைகளும், தவளையிலிருந்து ஊர்வனவாகிய பல்லி, ஓணான் முதலியவைகளும் முறையே கிளை கிளையாக மாறுதல் அடைந்தன. ஊரும் பிராணியிலிருந்து ஒரு கிளை பறக்கும் பட்சியாகவும்,
மற்றொரு கிளை முலைப் பாலுண்ணும் விலங்காகவும் மாறுபட்டன. இவ்விலங்கு வகைகளில் சில கங்காரு வகையாகவும், சில திமிங்கல வகையாகவும் சில குளம்புள்ள மிருக வகையாகவும், சில மாமிச பட்சிணியாகவும், சில கொத்தும் பிராணியாகவும், சில பூச்சி தின்னும் இனமாகவும்,
சில வௌவால் வகையாகவும் சில தேவாங்கு வகையாகவும் மாறுதலடைந்து,
கடைசியாக சில குரங்கு இனமாகவும், மனிதனாகவும், பிரிந்து ஒவ்வொரு இனமும் தனித்தனியே விருத்தியடையலாயின. ஒவ்வொரு பிரிவினையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கிறதென்பதற்கு ஒன்றிலிருந்து படிப்படியாய் உற்பத்தியானதென்பதற்குப் பல சாட்சியங்களும் ரூபகாரங்களும் உண்டு.
(1) எல்லாப் பிராணிகளும் தேக உருவத்தில் ஒற்றுமை காட்டுகின்றன. எல்லாப் பிராணிகளிடத்தும் ஒரே எண்ணுள்ள எலும்புகள் காணப்படுகின்றன.
மிருகங்கள் செய்யுந் தொழிலுக்கு ஏற்றவாறு மேற்போந்த சில வித்தியாசங்கள் தோன்றினாலும், தேகக் கட்டுப்பாட்டில் ஒற்றுமை தோன்றுகிறது.
உதாரணமாக மனிதனுடைய அல்லது குரங்கினுடைய முன்னங்கைகள் திமிங்கலத்தின் முன் கால்களாகவும் பட்சியின் இறக்கையாகவும் மீனின் சிறகாகவும் (குளே) மாறுபட்டிருக்கின்றன.
(2) ஆரம்பத்திலும்,
வளர்ச்சியிலும் எல்லாப் பிராணிகளும் ஒற்றுமை காட்டுகின்றன.
மனிதன் ஒற்றைப் பைக் கிருமியிலிருந்து உற்பத்தியாகி மீன் போலவும் புழுப்போலவும் தவளை போலவும் பிறகு ஓணான் போலவும் விலங்கு போலவும் உருவ பேதமற்று வளருகிறான். தவளை உற்பத்தியாகி வளரும் போது, தேகத்திரட்சியிலும் தேக உருவத்திலும் மீன்போலக் காணப்படுகிறது.
பிறகு இந்த மீன் உருவமே தவளையாக மாறுவதை யாவரும் கண்டிருக்கலாம். இதற்குக் காரணமென்னவென்றால் தவளையானது மீனிலிருந்தே சிறிது சிறிதாக மாறுபட்டுத் தவளையானது.
சிசுக்களின் வளர்ச்சியில் காணப்படும் பற்பல ஜந்துகளின் உருவ ஒற்றுமை. சிசுக்கள் எந்தப் பரம்பரையிலிருந்து உண்டானதென்பதைக் காட்டுவதும் தவிர, உபயோகமில்லாத அவயவங்கள் இருப்பதாலும் அவைகளுடைய சம்பந்தம் விளங்கும். உதாரணமாகப் புல் பூண்டு தின்னும் விலங்குகளுக்கு நீண்ட (ஏநசஅகைடிசஅ ஹயீயீநனேஒ) பெருங்குடல் உண்டு. ஆனால்,
அது மாமிச பட்சணியாகிய எல்லா மிருகங்களுக்கும் சிறிதாக இருக்கின்றன.
ஆனால்,
மனிதனுக்கும் அக்குடல் நீண்டிருக்கிறது.
பட்சிகளுக்கும் சில விலங்குகளுக்கும்
3-ஆவது கண் இரைப்பை நன்றாய்க் காணப்படுகின்றது.
ஆனால்,
அது மனிதனிடத்தில், ஒரு சிறு தசைபோல் விளங்குகிறது.
ஆகையால்,
எல்லா மிருகங்களும் ஒரே வேரிலிருந்து உண்டாயினவென்று தீர்மானிக்கலாம்.
மனிதன் குரங்கிலிருந்து வந்தானென்றால்,
குரங்கே மனிதனாக மாறவில்லை.
மனிதரும்,
குரங்கும் ஒரே கிளையிலிருந்து உற்பத்தியாகி வெவ்வேறு பிரிவாகப் பிரிந்தன. குரங்குகளில் வாலுள்ள குரங்கொன்றும்,
வாலில்லாக் குரங்கொன்றும்
இருவகைகளுண்டு. மனிதன் வாலில்லாக் குரங்கை ஒத்திருக்கின்றான்.
இவ்விருவர்களுக்கும்
200 எலும்புகளும் 300 தசைகளும் 32 பற்களும் தேக முழுவதும் ரோமமும் காணப்படுகின்றன. குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதும் சில சமயங்களில் பிறந்த பிறகும், உள்ளங்கையும் உள்ளங்காலும் தவிர மற்ற பாகங்களெல்லாம் ரோமத்தினால் மூடப்பட்டிருக்கிறது.
குழந்தை தாய் வயிற்றில் இருக்கும்போது, குரங்குகள், தூங்கும்போது கைகால்களை மடக்கி வைத்திருப்பதுபோல் காணப்படுகிறது.
குழந்தை தவழும்போது, மிருகம்(குரங்கு) நான்கு கால்களால் நடப்பதுபோல் இருக்கிறது.
பால் கொடுக்கும் ஸ்தனங்களும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றன. மனிதனுடைய பிண்டத்திற்கும் குரங்கினுடைய பிண்டத்திற்கும் அதிக வித்தியாசமில்லை.
குழந்தை பிறக்கச் சில வாரங்கள் இருக்கும்போதுதான் சிற்சில வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. வாலில்லாக் குரங்கின் நஞ்சு, மனுஷியின் நஞ்சு போலவே காணப்படுகிறது.
சில மானிடரும் குரங்கு குணம் உடைத்தாயிருப்பது அல்லாமல் ரூபத்திலும் குரங்கை ஒத்திருக்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று நெருங்கிய சம்பந்தமில்லாத மிருகங்களின் இரத்தம் ஒன்றை ஒன்று அழிக்கும். ஆனால், நெருக்கமான சம்பந்தமுள்ள மிருகங்களின் இரத்தம் ஒன்றை ஒன்று கொல்லாது, அதனோடு சம்பந்தப்பட்டிருக்கும்.
உதாரணமாக,
நாயும்,
நரியும் நெருக்கமான சம்பந்தமுள்ள ஜந்துகள். நாயின் இரத்தத்தை நரியின் இரத்தக் குழாயில் விட, வித்தியாசம் ஒன்றும் தோன்றாது. ஆனால்,
நாயின் இரத்தத்தை முயலின் இரத்தக் குழாயில் விட முயல் இறந்துபோம். வாலில்லாக் குரங்கின் இரத்தத்தை மனிதன் இரத்தக் குழாயில் விட்டால், வித்தியாசம் ஒன்றும் தோன்றாது. அந்த இரத்தமே வாலுள்ள குரங்கில் சம்பந்தப்பட்டால், உடனே இறக்கச் செய்யும். ஆகையால் மனிதன் வாலில்லாக் குரங்குக்கு நெருக்கமான சம்பந்தமுடையவனாகவும் பூர்வ வாலில்லாக் குரங்கின் சந்ததியைச் சேர்ந்தவனாகவும் இருக்கின்றான்.
மேலும்,
30 வருஷங்களுக்கு முன் ஜாவாத் தீவில் மண்டையோடும்,
பற்களும்,
கால் எலும்புகளும் அகப்பட்டன.
எலும்புகள் ஒருவித வாலில்லாக் குரங்கினுடையது. அதற்கு பிதகேந்த்ரபஸ் என்று பெயர். இந்தக் குரங்கு மனித உருவத்திலிருந்துதான் பூர்வ மனிதன் பெறப்பட்டானென்று எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு ஜெர்மனி தேசத்திலும், பாரிஸ் பட்டணத்திலும்,
இங்கிலாந்திலும்,
ஆப்பிரிக்காவிலும் சில எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.
இவைகளை குரங்கைப் போலிருக்கும் மனிதனென்றும், மனிதனைப் போலிருக்கும் குரங்கென்றும், குரங்கிற்கும் மனிதனுக்கும் மத்தியிலுள்ள பிராணிகளென்றும் தீர்மானித்திருக்கிறார்கள். மனிதனுடைய பூர்வக் குரங்கு மனிதச் சந்ததியார் காலாந்திரத்தில் பற்பல காரணங்களால் நசிந்து போயினர். ஆயினும், வாலில்லாக் குரங்குகளும் மனிதக் குரங்குகளும் பூர்வக் குரங்கு சந்ததியாரைச் சேர்ந்தவர்கள் என்று மாத்திரம் திடமாகச் சொல்லலாம்.
தற்காலமுள்ள வாலில்லாக் குரங்குகளும்,
மனிதர்களும் நெருங்கிய சம்பந்தமற்றவர்களாயினும்,
தூரப்பங்காளிகளாவர் என்பதிற் சிறிதும் சந்தேகமில்லை.
ரூபத்திலும் தேகக் கட்டுப்பாட்டிலும் குரங்கும் மனிதனும் எவ்வளவு ஒத்திருந்த போதிலும், அறிவில் அதிக பேதமுண்டே? மனிதருக்கு ஆத்மாவென்னும் ஒரு சித்துப் பொருள் உண்டே; அது குரங்கினிடத்தில்லையே? என்று சிலர் வினவலாம். ஆனால்,
வெளிப்படையில் அது உண்மை போலக் காணப்பட்டாலும்,
நன்றாய் ஆராயுமிடத்து உண்மையன்றென்று தெரியும். மனிதர்களுக்குள்ளும் எவ்வளவோ வித்தியாசமுண்டு. சிலர் அறிவில் குறைந்தவராகவும், சிலர் நிறைந்தவராகவும் காணப்படுகிறார்கள். பல சாஸ்திர நிபுணரான பண்டிதர்க்கும் பாமரர்க்கும் எவ்வளவோ தார தம்மியமுண்டு.
இப்பாமரருக்கும் ஊரூராய்த் திரியும் நாகரிக மற்ற ஜோயி ஜங்கமருக்கும் அதிக வித்தியாசம் காணப்படவில்லை.
இவர்களுக்கும் காட்டுமிராண்டிகளுக்கும் உள்ள வித்தியாசம் மிகக் கொஞ்சமே. இக்காட்டுமிராண்டிகளுக்கும், வாலில்லாக் குரங்குகளுக்குமுள்ள வித்தியாசம் அதிலும் மிகக் கொஞ்சமாம். மேற்சொல்லியவர்களுடைய வாழ்வையும் நடையுடை பாவனைகளையும் கவனித்தால், அறிவில் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர, மனிதருக்கு ஏதோ பிரத்தியேகமான ஆத்மசக்தியுண்டென்பதற்கும்,
அச்சக்தி குரங்கினிடத்தும் மற்ற மிருகங்களிடத்தும் இல்லையென்பதற்கும் யாதும் ஆதாரங்கள் கிடையாது.
மேலும்,
எங்கும் வியாபித்துள்ள ஜன சக்தியே கல்லிலும்,
புல்லிலும்,
மிருகாதி மானிடரிடத்தும் காணப்படுகிறது.
இச் சக்தி வெவ்வேறு இடத்தில் தோன்றி வெவ்வேறு தொழிலை இயக்குகின்றது. ஆகையால், வெவ்வேறு ஜீவராசிகளின் தேகம், மூளை ஆகியவைகளின் நிலைமைக்குத் தக்கவாறு அறிவு குறைந்தும் அதிகப்பட்டுமிருக்கும்.
இச் சக்தியே மனிதனிடத்தில் மனோசக்தி (ஆத்ம சக்தி)யென்று பெயர்பெற்றுப் பலவித அற்புதங்களைச் செய்யக் கூடியதாயிருக்கிறது.
சக்தியானது அமையும் இடத்திற்குத் தக்கவாறு மாறுந் தன்மையுடையதாகும். பிராணவாயுவும், ஜல வாயுவும் கலந்தபோது,
வேறு சக்தியுண்டாகின்றது. அதனின்று உடனே தண்ணீர் உற்பத்தியாகின்றது. அதே தண்ணீர் மற்ற பவுதிகப் பொருள்களுடன் கலந்தபோது வேறுவிதமான சக்தியுண்டாகிறதைக் காண்கிறோம். அப்படியே பற்பல பொருள்கள் கலக்க அவ்வப் பொருள்களின் பேதங்களுக்குத் தக்கபடி சக்தியும் வித்தியாசப்படும்.
புரோட்டோ பிளாசம் என்பது பல பொருள் கலந்த ஒரு கூட்டுச் சரக்கு. அதில் தோன்றும் சக்தியும் மற்ற சக்தியைவிட வேறாக இருக்கும்.
இந்தப் புரோட்டோபிளாசம் கல்லீரலாக
(டுஎநச)
மாறினபோது,
அதன் சக்தி வேறாகி ஒருவிதமான ரசத்தை உண்டுபண்ணுகிறது. இதுவே இருதயக் கமலமாக (ழநயசவ) மாறினபோது, இதன் சக்தி இரவும் பகலும் ஓயாமல் இரத்தத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் சக்தியாகத் திரிகிறது.
இந்தப் புரோட்டோபிளாசம் மூளையாக மாறினபோது, அதன் சக்திக்குத்தான் ஆத்ம சக்தி அல்லது மனோ சக்தி பெயர். இந்தச் சக்தி மூளையோடு சம்பந்தப்பட்டிருப்பதால், மூளைக்கு நோய்கள் கண்டால், மனோ சக்தியும் அழியும். ஆகையால்,
உலகத்தில் வியாபித்திருக்கும் இயற்கை பவுதிகச் சக்தியைத் தவிர, வேறே ஒரு நவீன சக்தியுண்டென்பதற்கும்,
அது மனித உருவம் தாய் வயிற்றில் உற்பத்தியானபோது உள் நுழைந்து இறந்தபோது மறுபடியும் வெளியே போய் வேறொரு தாயகத்தில் பிரவேசிக்குமென்பதற்கும் சற்றேனும் சாஸ்திர ஆதாரமில்லை. விரிவுக்கஞ்சி ஈண்டதிகமாகக் கூறவில்லை. சுருங்கச் சொல்லின், மனிதன் பிராணி வர்க்கத்தினின்று தோன்றிய உருவ பேதமே. அவன் பிரத்தியோகமாகப் படைக்கப்படவில்லை. இவ்விஞ்ஞான சாஸ்திரத் தீர்மானம் சமயங்களின் முடிவுக்கு நேர் முரணாக இருக்கிறது.
சமயங்களெல்லாம் மனிதன் கடவுள் சொரூபமென்றும், கடவுள் மனிதனைத் தன் உருவைப் போலவே உண்டாக்கினாரென்றும் முறையிடுகின்றன.
நூல் - மதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர் - கே.பிரம்மச்சாரி
Comments
Post a Comment