மதமும் விஞ்ஞானமும் - அத்தியாயம் 3
அத்தியாயம்
3
உயிர்
உயிருடைய வஸ்துகளுக்கும், உயிரில்லா அனிந்திரிய வஸ்துகளுக்கும் வித்தியாசம் அதிகமாயில்லை. இவ்விரண்டு பொருள்களையும் பிரித்துச் சோதித்துப் பார்ப்போமானால், ஒரே விதமான சேர்க்கைப் பூதங்களே காணப்படுகின்றன. உயிருடைய வஸ்துகளாகிய ஜந்துகளுக்கும் தாவரங்களுக்கும் புரோட்டோ பிளாஸம் (ஞசடிவடியீடயளஅ)
என்று சொல்லப்பட்ட மூலக் கருவஸ்து பொதுப்படையாக இருக்கிறது. இது பிராணவாயு,
ஜலவாயு,
உப்பு வாயு, கரி, கந்தகம், நிபாக்னி, அயன் என்னும் சில பூதங்கள் சேர்ந்ததொன்றாகும். இந்தப் புரோட்டோ பிளாஸம் எப்படித் தோன்றியதென்று அறிந்து கொள்வோமானால், உயிர் வர்க்கம் தோன்றிய விதத்தை அறிந்து கொள்ளலாம்.
தனக்குத்தானே அசைந்தியங்கும் மிகச்சிறிய தாவரங்கள் முதல், பெரிய மரங்கள் ஈறாகவுள்ள எல்லாச் செடி கொடிகளும் குளோரோபில்
(Chlorophyll) என்னும் பச்சைநிற வஸ்துவை உடைத்தாயிருக்கின்றன. இப்பச்சை நிற வஸ்து சூரியனுடைய வெளிச்சத்தைக் கொண்டு காற்றிலிருக்கும் கரியமிலவாயுவைக் கரியாகவும்,
பிராண வாயுவாகவும் நசிப்பித்து அத்துடன் வேரினால் எடுக்கப்பட்ட நீர், நவச்சாரம்
(Ammonia) முதலியன சேர்த்துத் தனக்கு வேண்டிய ஆகாரமாக உட்கொள்ளுகிறது. இப்பவுதிகச் செய்கை முக்கியமாகப் பச்சை இலைகளில்தான் நிகழ்கின்றது.
சாதாரணமாகப் பிராணிகளுக்கு மேற்சொல்லிய குளோரோபில் என்னும் பச்சைநிறம் இல்லை. ஆகையால்,
அவைகள் அனிந்திரிய வஸ்துவாகிய கரியமில வாயுவிலிருந்து ஆகாரம் கொள்ளுவதில்லை.
இப்பூமியின் மேற்பாகம் குளிர்ந்து,
காற்றும் கரியமில வாயுவும், தண்ணீரும் பிறகு பலவித உப்பும் உண்டாயின. அவ்விதப் பக்குவ நிலையில் பச்சை நிறமுடைய நிறமில்லா ஜந்துகள் ஜீவிக்க ஏதுமில்லை.
ஆகையால்,
தாவர வஸ்துகள் முதல் முதலில் பூமியின்கண் தோன்றியிருக்கின்றன.
ஜந்துகளின் தசையையும், செடிகளின் தசையையும் அணுதரிசினிக் கண்ணாடியினால் பார்ப்போமானால், இவ்விரண்டும் செங்கற்களைப்போல,
லட்சக்கணக்கான அறைகளால் ஆக்கப்பட்டுள்ளனவென்பதைக் காணலாம். இவைகளுக்குச் சாளரங்கள் அல்லது செல்ஸ் என்று பெயர். இச் செல்ஸ்களில் மிகச் சிறிய சருக்கொப்பளங்கள் காணப்படும். அணு மாத்திரமான இச்சாளரங்களில் மேற்சொன்ன புரோட்டோபிளாஸம் என்ற மூலக்கருவஸ்து நிறைந்திருக்கிறது.
ஜடமாய்ப்பார்க்குமளவில் புரோட்டோ பிளாஸம் மூலக்கரு ஒட்டிக்கொண்டு,
நெகிழுந்த தன்மையுடன் பாகு போலிருக்கும்.
பவுதிகமாய்ப் பார்க்குமளவில் வெள்ளைக் கருச்சத்தைப் போன்ற சத்தாகவும், ஜலத்தில் கரையாததாகவும் இருக்கிறது. ஆனால், ஜலத்தில் ஊறினால் செலிதம் (Gelatime) என்னும் பசைபோல் நெகிழ்ந்துறழத்தக்க வஸ்துவாகவுமிருக்கிறது.
வாகடரீதியாகப் பகுத்தறிந்தால், புரோட்டோபிளாஸத்திற்கும் வெண் கருச்சத்திற்கும் வித்தியாசம் யாதொன்றுங் காணப்படுகிறதில்லை. ஆனால், இந்தப் புரோட்டோபிளாஸம் எப்படி உண்டானதென்பதைக் கவனிப்போம்.
சூரிய வெளிச்சமில்லாத இடத்தில் வளரும் செடியானது,
கொஞ்சங் கொஞ்சமாகப் பச்சை நிறத்தை இழந்து, பழுப்பு வெள்ளை நிறமடைந்த செடியை வெயிலில் வைப்போமானால், மறுபடியும் பச்சை நிறம் தோன்றும். ஆகையால்,
பச்சை நிறமானது பசை போலிருக்கும் புரோட்டோ பிளாசத்தைச் சார்ந்தேயிருக்கிறதென்றறியலாம்.
இந்திரிய வஸ்துகள் (Organism)
அதாவது உயிருள்ள ஜீவன்கள் பவுதிக நிலைமையில் இருக்கின்றன. இந்த நிலைமைக்குக் கோலாய்டல் நிலைமை (Collidal) என்று பெயர். இந்நிலைமை உயிருள்ள இந்திரிய வஸ்துகளுக்கும் உயிரில்லா அனிந்திரிய வஸ்துகளுக்கும் சில உலோகங்களுக்கும் அமைந்திருக்கின்றன.
இந்நிலைமையில் அவ்வுலோகங்கள் உயிருள்ள இந்திரியப் பொருளைப்போலக் குணாதிசயங் காட்டுகின்றன.
கோலாய்ட் என்பது அனிந்திரிய கோலாய்ட் என்றும் இந்திரிய கோலாய்ட் என்றும் இரு வகைப்படும். அலுமினியம் (Aluminium)
சிலிகா
(Silica) சுண்ணம் (Calcium) முதலிய உலோகங்களை அனிந்திரிய கோலாய்ட் என்று சொல்லலாம். வெண் கருச்சத்துள்ள
(ஹடடசரஅந)
இருவிதக் கோலாய்ட்களில் முதன் முதலில் சூரியனுடைய வெளிச்சத்தினால் நிறம் மாறுபாடு அடையக்கூடிய அனிந்திரியக் கோலாய்ட் உண்டாகின்றது. செலினியம் புரேனியம் என்று சொல்லப்பட்ட இரண்டு உலோகங்களில் அமைந்துள்ள கோலாய்ட், சூரிய வெளிச்சத்தினால் நிறம் மாறுதல் அடைகின்றது.
(ருசயரைஅ யசந ளநளேவைலை வடி டபைவ) சீதோஷ்ண ஸ்திதி மாறுவதனாலும்,
மற்றக் காரணங்களினாலும் மேற்சொன்ன அனிந்திரியக் கோலாய்ட் இந்திரிய கோலாய்டால் மாறுபாடடைகின்றது. இங்ஙனம் மாறுதலுற்ற கோலாய்ட் நிலைமையில் சடப்பொருளானது சலனமுடையதான சக்தியுடையதாயும் மாற்றமடைகிறது.
இவ்விதம் மாறலுற்ற இச்சக்தியே உயிரென்று சொல்லப்படும்.
இவ்விதக் கூட்டுறவினால் ஆக்கப்பட்ட புரோட்டோபிளாஸம் உயிரோடிருக்க வேண்டுமானால், அதற்கும் அதன் சுற்றுப் பக்கங்களுக்கும் ஒருவிதச் சம்பந்தமிருக்க வேண்டிய அவசியமேற்படுகிறது.
உயிரில்லாத வஸ்துவிலும், உயிருள்ள வஸ்துவிலும் ஒரே விதமான பூதங்கள் காணப்படுகின்றன.
இப்பூதங்கள் ஒன்றோடொன்று கலக்கும் அளவின் வித்தியாசத்தினால் பற்பலவிதமான வஸ்துகள் உண்டாகின்றன. உதாரணமாக நிலக்கரியே
(ஊயசயெ)
வைரக்கல்லாகவும்
(னுடிஅடினே),
காரீயமாகவும்
(ழுசயயீவைந),
முகரியாகவும்
(ஊயசஉடியட)
அகப்படுகின்றன.
இப்போது,
இவைகளையெல்லாம் மனிதனே செய்துகொள்ளுகிறான்.
ஜலவாயுவும் பிராணவாயுவும் கலந்தபோது தண்ணீர் உண்டாகின்றது.
மேற்சொன்ன இரண்டினுடன் கரியும், உப்புவாயுவும்,
கந்தகமும்,
நிபாக்னியும் இன்னும் சில பூதங்களும் சேர்ந்தால்,
புரோட்டோபிளாஸம் உண்டாகும். சில வருஷங்களுக்கு முன்னே, மனிதனால் செய்ய முடியாததென்று சொல்லப்பட்ட பல பொருள்களை,
இப்போது மனிதன் செய்கிறான்:-
(நுரசநயளவயச ஊயசஉடியட ஹடரெஅந) ஆகையால்,
புரோட்டோபிளாஸமும் கொஞ்ச காலத்திலாவது அல்லது நீண்ட காலஞ்சென்ற பிறகாவது செய்ய முடியுமென்றே சொல்லலாம்.
னுச.
ஊ.
பாஸ்டியன் என்பவர் அனிந்திரிய வஸ்துகளின் சேர்க்கையாலே உயிருள்ள பிராணிகள் பலவற்றை உண்டாக்கினாரென்று தெரிய வருகிறது. இப்படி உயிருக்கு அடிப்படையாகிய புரோட்டோபிளாஸம் உண்டாகிப் பிறகு சூரிய உஷ்ணத்தினால் பச்சை நிறத்தைப் பெற்று, முதல் முதல் தாவர வஸ்துகள் ஏற்பட்டன. அதிலிருந்து ஒரு கிளை ஜந்துகளாகவும் அவைகள் ஒவ்வொன்றும் விகாரப்பட்டு மாறிப் புழுவாய், நீர்வாழ்வன,
ஊர்வன,
பறப்பன,
விலங்கு,
மனிதனென்னும் வகைகளாய் மாறி உயிர்வர்க்கங்களாகத் தோன்றியிருக்கின்றன.
மதத்தால் வரும் கேடு
மதத்திற்கும்,
உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை.
ஏனெனில்,
அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கை மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழிமறித்துக் கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய்க் கொண்டிருக்கிறது.
அதனால்,
மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமளிக்காமலே போய் விடுகின்றது.
(27-9-1931 குடிஅரசு பக்கம் 8)
நூல் - மதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர் - கே.பிரம்மச்சாரி
Comments
Post a Comment